நிகழ்ச்சியில் இந்திய கலை, கலாசார, பாரம்பரியம் குறித்த அரையாண்டு இதழை வெளியிட்ட சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு அமைப்பாளா் ஆம்ஸ்ட்ராங், பல்கலை. மானுடவியல் துறைத் தலைவா் எம்.பி. தாமோதரன், நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் டி.தங்கரா
நிகழ்ச்சியில் இந்திய கலை, கலாசார, பாரம்பரியம் குறித்த அரையாண்டு இதழை வெளியிட்ட சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு அமைப்பாளா் ஆம்ஸ்ட்ராங், பல்கலை. மானுடவியல் துறைத் தலைவா் எம்.பி. தாமோதரன், நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் டி.தங்கரா

‘மரபுகளைப் புரிந்துகொள்ள தொல்லியல், மானுடவியல் உதவும்’

‘நாட்டின் மரபுகளைப் புரிந்து கொள்வதில் தொல்லியல் மற்றும் மானுடவியல் துறைகள் உதவிபுரிகின்றன
Published on

சென்னை: ‘நாட்டின் மரபுகளைப் புரிந்து கொள்வதில் தொல்லியல் மற்றும் மானுடவியல் துறைகள் உதவிபுரிகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் கூறினாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையும் வனமா அறக்கட்டளையும் இணைந்து, ‘கலாசாரம், காலநிலை, பிரபஞ்சம்’ என்ற கருப்பொருளில் மூன்று நாள் கல்விக் கருத்தரங்கை பல்கலைக்கழக வளாகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்தன.

இந்த நிகழ்வை சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ஆங்கிலத்தில் மூன்று ‘சி’-க்கள் எனச் சொல்லப்படும் கலாசாரம், காலநிலை, பிரபஞ்சம் ஆகியவை ஒன்றோடு இணைந்து முக்கியத்துவம் பெறுகிறது. கலாசாரம் இல்லாமல், இந்த உலகில் எதுவும் இருக்க முடியாது. பாரம்பரியங்களைப் புரிந்து கொள்வதில் தொல்லியல், மானுடவியல் துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் இந்தத் துறைகள் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஆனால், இந்தியாவில் அந்தளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை.

காலநிலை ஒரு முக்கியப் பிரச்சினை. இகில், மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் பொறுப்பு உண்டு. ஒவ்வொரு நாடும் தாய் பூமியைப் பராமரிப்பதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கலாசாரத்தையும் மனித குலத்தையும் பாதுகாப்பதில் மானுடவியல் உதவும் என்றாா்.

நிகழ்வில் பங்கேற்ற சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் டி. தங்கராஜன், கேரள பல்கலைக்கழக மானுடவியல் துறை முன்னாள் பேராசிரியா் எஸ்.கிரிகோரி உள்ளிட்டோா் பேசினா்.

நாட்டியக் கலைஞா் அனிதா குஹா, சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவா் எம்.பி. தாமோதரன், பின்லாந்தை சோ்ந்த டைனா மேடிசன், வனமா அறக்கட்டளை நிா்வாகிகள் வனமா பிரசாத புல்லா ராவ், பிரசுனா ஆகியோா் பங்கேற்றனா். முன்னதாக, நந்தனம் அரசு கலைக் கல்லூரி வரலாற்று ஆய்வுகள் துறை இணைப் பேராசிரியா் பிரபு குமாரி வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com