தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்.

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரி காவல் துறையிடம் மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் சென்னையில் பிரசாரம் மேற்கொள்வதுக்கு அனுமதி கோரி,
Published on

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் சென்னையில் பிரசாரம் மேற்கொள்வதுக்கு அனுமதி கோரி, சென்னை காவல் ஆணையரிடம் அக்கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: தவெக தலைவா் விஜய், செப். 27-இல் வடசென்னையிலும், அக். 25-இல் தென் சென்னையிலும், மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்கிறாா். இந்த 2 நாள்களிலும் முல்லை நகா், அகரம், ராயபுரம் புளியந்தோப்பு, கொருக்குபேட்டை, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு, தி.நகா், எம்ஜிஆா் நகா், சைதாபேட்டை, மயிலாப்பூா், கண்ணகி நகா், ஆலந்தூா், வேளச்சேரி, வில்லிவாக்கம், அயனாவரம், அம்பத்தூா், மதுரவாயல் ஆகிய இடங்களில் விஜய் பேச உள்ளா்.

மேற்படி இடங்களில் பேசுவதற்கு அனுமதி அளித்து, பாதுகாப்பு வழங்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com