பாஜக கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை!

பாஜக கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை பற்றி...
Annamalai
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை X
Published on
Updated on
1 min read

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பாஜக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகின்றன. முதலில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்த நிலையில் சமீபத்தில் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் விலகினர்.

ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து வேறுபாடு, எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல்கள் என கூட்டணியில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

சமீபத்தில் செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

கூட்டணி விவகாரம், தேர்தல் வியூகம், தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து இதில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை தொடங்கிய கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக பங்கேற்கவில்லை என்று அண்ணாமலை விளக்கம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று(செப். 16) பிற்பகல் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Summary

Former state president Annamalai participate in BJP meeting today in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com