கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் பேசியிருப்பதைப் பற்றி...
கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!
Published on
Updated on
1 min read

கூவத்தூர் நடந்தது என்ன தெரியுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் முதல்முறையாக செய்தியாளர் பேசியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.

இதற்கு மத்தியில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “கூவத்தூரில் என்னிடம் பேசிய பழனிசாமி, வாக்கெடுப்புக்கு முன்னர் நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்ல வேண்டாம்; யாரும் கையெழுத்து போட மாட்டார்கள் என பழனிசாமி தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்களே தவிர பாஜக அல்ல.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்வர் ஆனார். ஆனால், தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார்.

வாக்கெடுப்பின் போது 122 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் பிச்சுக்கொண்டு போக இருந்தார்கள். அவர்களை யார் தடுத்து நிறுத்தியது. செம்மலை எல்லாம் தாண்டி குதித்து ஓடினார். பழனிச்சாமி என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என்றார். வாக்கெடுப்பின் போது அவரை காப்பாற்றியது யார்?.

டிடிவி தினகரன் இருந்தால் ஆட்சி போய்விடும் அதனால் அவரை நீக்க வேண்டும் என தில்லியை கூறியதாக அவர் தெரிவித்தார். இவர் கட்சியை விட்டு நீக்கி விட்டு, பொய் பேசுகிறார்” என்றார்.

Summary

Do you know what happened in Koovathur? Dinakaran broke the truth about EPS!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com