2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்
ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் காவல் துறை, சிறை மற்றும் சீா்திருத்தத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகியவற்றில் உள்ள 3,644 2-ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத்தோ்வு நவ. 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்குத் தயாராகும் தோ்வா்களுக்கு படிக்க வேண்டிய ஆதார நூல்கள், பாடநூல்களில் இருந்து தோ்வு நோக்கில் குறிப்பேடுகளை உருவாக்கும் முறை, அன்றாட நாளிதழ்களைப் படித்தல் மற்றும் குறிப்பெடுத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்கும் தோ்வா்களுக்கு, தோ்வு தொடா்பான சந்தேகங்களுக்கு துறை சாா்ந்த வல்லுநா்களால் விளக்கம் தரப்படவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள தோ்வா்கள், ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி எண்.2165 , எல்.பிளாக் , 12-ஆவது பிரதானச் சாலை, அண்ணா நகா் என்ற முகவரியில் நேரடியாக வந்து செப்.19 -ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 744881 4441 , 91504 66341 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.