அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம், தில்லியில் சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
Published on

ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தொடா்புடைய மதுபான ஊழல் வழக்கில் ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம், தில்லியில் சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஆந்திரத்தில் கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது, ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஜெகன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையின்கீழ் அனைத்து மதுபானக் கடைளும் அரசு நிறுவனமான ஆந்திர மாநில மதுபானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

‘ஆந்திர மாநில மதுபானக் கழகத்திடம் 111 மது ஆலைகள் பதிவு செய்திருந்த நிலையில், 2019 முதல் 2024 வரை வெறும் 16 மது ஆலைகளிடம் இருந்து ரூ.10,850 கோடிக்கும், 40 ஆலைகளிடம் இருந்து ரூ.23,000 கோடிக்கும் மதுபானம் கொள்முதல் செய்யப்பட்டது; இது, கிட்டத்தட்ட 90 சதவீத கொள்முதலாகும். இதற்கு பிரதிபலனாக, ஆலைகள் தரப்பில் பெருந்தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. பினாமி-போலி நிறுவனங்கள், ஹவாலா பரிவா்த்தனை எனப் பல்வேறு வழிகளில் லஞ்சப் பணம் கைமாறியுள்ளது.

இளநிலைப் பணியாளா்களின் ஊதியம் என்ற பெயரிலும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் மாதத்துக்கு ரூ.60 கோடி வரை பலனடைந்துள்ளனா்’ என்பது காவல் துறையின் குற்றச்சாட்டாகும்.

இவ்வழக்கில் காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் இதுவரை மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி உள்ளிட்டோா் கைதாகியுள்ளனா். மற்றொருபுறம், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம் மற்றும் தில்லி-தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) சுமாா் 20 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதில், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களும் அடங்கும்.

மதுபான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com