
சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை திமுக அரசு கைவிடப்போவதாகத் தெரிவித்த முடிவை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வெளியிட்ட திட்டங்களில் 256 திட்டங்களைக் கைவிடப்போவதாக திமுக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசின் இந்த முடிவு குறித்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில் அண்ணாமலை கூறியதாவது,
``ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவந்த திமுக அரசு, தற்போது, பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவிகிதம்கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதியாண்டில் வெளியாகிவிட்டது. சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவிப்புகள்தான்.
நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர்ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும்தான்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.