'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த திமுக உத்தரவு...
mk stalin
முதல்வர் ஸ்டாலின்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப். 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த செப். 15 ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து திமுகவில் 'ஓரணியில் தமிழ்நாடு' அணியில் இணைந்துள்ள அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்கும் பொருட்டு சிறப்பு விளக்கக் கூட்டங்கள் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டின் மண்-மொழி மானம் காக்க கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான ஏற்பு கூட்டங்கள் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், கழக மாவட்ட வாரியாக பின்வரும் அட்டவணைப்படி நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

DMK Orders to hold resolution meetings across Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com