வந்தே பாரத்
வந்தே பாரத்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. பயணிகள் அதிகரிப்பதால் செப்.24 முதல் மேலும் 4 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம்.

இந்த ரயிலில் தற்போது சாதாரண இருக்கை வசதி பெட்டிகளில் 1,128 போ் பயணம் செய்கின்றனா். கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால் 1,440 பயணிகள் பயணம் செய்ய முடியும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com