வேலுநாச்சியார் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

வேலுநாச்சியாா் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து பற்றி...
வேலுநாச்சியாா் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
வேலுநாச்சியாா் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்TNDIPR
Published on
Updated on
1 min read

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகத் திகழ்ந்த வேலுநாச்சியாரின் வீரத்தை வருங்கால தலைமுறையினா் அறிந்து போற்றும் வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடா்புத் துறை சார்பில் வேலுநாச்சியாரின் சிலை ரூ. 50 லட்சத்தில் நிறுவப்பட்டது.

இந்த சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை திறந்துவைத்தார். தொடர்ந்து, சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Summary

Chief Minister M.K. Stalin unveiled the statue of freedom fighter Velunachiyar in Chennai on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com