எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயண தேதி மாற்றம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Edappadi Palaniswami Namakkal district tour date changed
பிரசாரம்  மேற்கொண்ட  எடப்பாடி  கே. பழனிசாமி.
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச்செயலர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், கட்சிப் பொதுச் செயலர் எடப்பாடி K. பழனிசாமி 29.9.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, எழுச்சிப் பயண ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 20.9.2025, 21.9.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 4.10.2025, 5.10.2025 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com