செப். 22 முதல் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
செப். 22 முதல் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

செப். 22 முதல் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சரஸ்வதி பூஜை, தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செப். 22 முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Published on

சரஸ்வதி பூஜை, தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செப். 22 முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து செப். 22 முதல் அக். 20-ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06151) மறுநாள் பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06152) வரும் செப். 23 முதல் அக். 21 வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், கொடைரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.

திருநெல்வேலி - செங்கல்பட்டு: வரும் செப். 26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06154) நன்பகல் 12.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

மறுமாா்க்கமாக அதே நாள்களில் இந்த ரயில் (எண்: 06153) செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டு வந்தடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் சனிக்கிழமை முதல் (செப். 20) தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com