

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் வீட்டுக்குள் அத்துமீறி இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவா் விஜய் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தவெக தலைவா் விஜய் நீலாங்கரை கேசுவரினா அவென்யூவில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறாா். அவருக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், விஜய் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா், அவரது வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தாா். புதன்கிழமை மாலை மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சியில் ஈடுபட வந்த நடிகா் விஜயை, அந்த இளைஞா் கட்டிப்பிடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த விஜயும், அவரது பாதுகாவலா்களும் அந்த இளைஞரைப் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா்.
விசாரணையில் அவா் மதுராந்தகத்தைச் சோ்ந்த அருண் (24) என்பதும், 4 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும், வேளச்சேரியில் உள்ள உறவினா் வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அருணை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சோ்த்தனா்.
போலீஸாா் விசாரணை: ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி, விஜய் வீட்டுக்குள் அந்த இளைஞா் நுழைந்தது எப்படி? என்று போலீஸாா் நடத்திய விசாரணையில், விஜய் வீட்டின் பின்பகுதியில் மழைநீா் வடிகால் கட்டும் பணி நடைபெறுவதால் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருப்பதும், அதனால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை பயன்படுத்தி விஜய் வீட்டின் அருகே உள்ள மரத்தில் அருண் ஏறி வீட்டுக்குள் குதித்து பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து விஜய் வீட்டின் பின் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு பிரிவு சோதனை: இதனிடையே விஜயின் ‘ஒய்’ பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை காவல் துறையின் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். அங்கு சுமாா் 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது. ஆனால் விஜய் வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் எந்தப் பொருளும் கண்டெக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.