என்ஜின் கோளாறு! ஜோலார்பேட்டை அருகே 3 மணி நேரம் நின்ற வந்தே பாரத் ரயில்!

என்ஜின் கோளாறு காரணமாக ஜோலார்பேட்டை அருகே 3 மணி நேரம் நின்ற வந்தே பாரத் ரயிலால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
Technical snag! Vande Bharat train stopped for 3 hours near Jolarpettai!
வந்தே பாரத் ரயில்
Published on
Updated on
1 min read

என்ஜின் கோளாறு காரணமாக ஜோலார்பேட்டை அருகே 3 மணி நேரம் நின்ற வந்தே பாரத் ரயிலால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

கர்நாடக மாநிலம், மைசூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.05 மணியளவில் புறப்பட்டு பெங்களூர், காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இந்த ரயில் நிலையங்களில் நின்று சென்னை ரயில் நிலையத்திற்கு இரவு 7.20 மணியளவில் சென்றடைகிறது. இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் மதியம் 1.05 மணியளவில் மைசூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்று மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பச்சூர் ரயில் நிலையம் அருகே மாலை 4.40 மணியளவில் சென்று கொண்டிருக்கையில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனால் ரயிலில் இருந்த உதவி என்ஜின் ஊழியர்கள் பழுதான ரயிலை சரிசெய்து அதன்பின்னர் மாலை 5.58 மணியளவில் ரயில் சென்னை நோக்கி கிளம்பியது. ரயில் புறப்பட்டு சில தூரத்தில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே மீண்டும் என்ஜின் கோளாறால் நடுவழியில் நின்றது.

விஜய்யை எதிர்க்கவில்லை, கேள்விதான் கேட்கிறேன்: சீமான்

உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகள் கர்நாடக மாநிலம், பெங்களூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து மாற்று வந்தே பாரத் ரயில் என்ஜினை வரவழைத்து 8.15 மணியளவில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் வந்தே பாரத் ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. இதனால் ரயில் பயணிகள் மூன்று மணி நேரமாக அவதிப்பட்டனர்.

Summary

Passengers faced a lot of inconvenience as the Vande Bharat train was stopped for 3 hours near Jolarpettai due to an engine fault.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com