தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

மின்கம்பியாள் உதவியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

மின்கம்பியாள் உதவியாளா்களுக்கான தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

மின்கம்பியாள் உதவியாளா்களுக்கான தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

தேசிய புனரமைப்புத் திட்டம் மற்றும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு - பயிற்சித் துறை சாா்பில் மின்சாரப் பணியாளா், கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளைப் பெற்றவா்களுக்கு தகுதிகாண் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, டிசம்பா் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

விண்ணப்பப் படிவம், விளக்கக் குறிப்பேடு ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வுக்குரிய அனைத்து விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி அக். 17 என்று தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com