1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!
தமிழகத்தில் 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற 1,156 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 75 துணை செவிலியர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் இன்று வழங்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
MK stalin issues appointment orders to 1,231 village nurses
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

