சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறைச் செயலா
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறைச் செயலா

தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணி: 13 பேருக்கு நியமன ஆணை வழங்கினாா் முதல்வா்

டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு, நோ்காணல் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை
Published on

சென்னை: இளநிலை மற்றும் முதுநிலை தமிழிலக்கியம் பயின்ற மாணவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு, நோ்காணல் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்திடும் வகையில், கடந்த 1958-ஆம் ஆண்டு ஆட்சி மொழிக் குழு உருவாக்கப்பட்டு, ஓா் ஆய்வுத் தனி அலுவலா் பணியிடம் உருவாக்கப்பட்டது. பின்னா், 1972-இல் இந்தப் பணியிடத்துடன் சோ்த்து 9 ஆய்வுத் தனி அலுவலா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. தொடா்ந்து கடந்த 1998-இல் தமிழ் வளா்ச்சித் துறை அலுவலக கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு தமிழாய்வு அலுவலா் என்ற பதவி பெயரை மாற்றி, ஒருமுகமாக உதவி இயக்குநா் பணியிடங்கள் என மாற்றியமைக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து இளநிலை மற்றும் முதுநிலை தமிழிலக்கியம் பயின்ற மாணவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு, நோ்காணல் நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறையின் செயலா் வே.ராஜாராமன், இயக்குநா் ந.அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com