விஜய் அகந்தையுடன் பேசுகிறார்; அவருக்குப் பின்னால் பாஜக இருக்கிறது: அப்பாவு

பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி...
Appavu
பேரவைத் தலைவர் அப்பாவு DIN
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அகந்தையுடன் பேசுவதாகவும் அவருக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்ளுடன் பேசியதாவது:

விஜய்யின் பேச்சு குறித்து "நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் ஆனந்த் போஸ் ஆகியோரிடம் இது தொடர்பாகப் பேசியதாகப் பல பத்திரிகை செய்திகள் வந்துள்ளன.

முதலமைச்சரை மிரட்டும் தொனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோகால் வேறு. பிரதமர் மற்றும் முதல்வர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனத்துடனும் இருக்க வேண்டும்" என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுகிறதா? என்ற கேள்விக்கு, "பயப்படுபவர்களுக்குத்தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல 'தலைவா' படப் பிரச்சனைக்காக மூன்று நாள்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல" என்று காட்டமாகப் பதிலளித்தார்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி, "ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சலுகை கிடைத்திருப்பதால் மக்கள் சேமிப்பு உருவாகும் எனப் பிரதமர் சொல்லியுள்ளார். அப்படியானால், இத்தனை ஆண்டுகள் சேமித்த 20 லட்சம் கோடி ரூபாயை அவர் எங்கே வைத்திருக்கிறார்? மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது" என்று கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் குறித்த கேள்விக்கு, "ஆளுநர் எதனையும் தெரியாமல, யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார், அய்யோ பாவம்" என விமர்சித்தார்.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்துப் பேசிய அப்பாவு, "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 831 கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கி, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது" என்றார்.

பாமக கட்சியில் நிலவும் உள்கட்சிப் பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்த கேள்விக்கு, "சட்டமன்றம் கூடும்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.

Summary

TN Assembly speaker Appavu says that TVK Leader Vijay speaks arrogantly; BJP is behind him: Appavu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com