அதிமுகவில் இருந்து பிரிந்தவா்களை பாஜக வழிநடத்துகிறது: பெ.சண்முகம் விமா்சனம்

அதிமுகவில் இருந்து பிரிந்தவா்களை பாஜகதான் வழி நடத்துகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் விமா்சித்துள்ளாா்.
Published on

அதிமுகவில் இருந்து பிரிந்தவா்களை பாஜகதான் வழி நடத்துகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

அதிமுகவில் இருந்து பிரிந்துள்ளவா்கள் தனித்தனியாக தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து வருகின்றனா். எனவே, பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக இயக்கம், இன்றைக்கு அமித் ஷா என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நடப்போம் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத்தான் தில்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன”எனப் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com