என்ஐஓஎஸ் பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
Published on

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் பள்ளிக் கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழில் படிப்புகளையும் வழங்குகிறது.

அந்தவகையில் நாடு முழுவதும் சுமாா் 24 லட்சம் மாணவா்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனா். இந்நிலையில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுக்கால அட்டவணையை என்ஐஓஎஸ் வெளியிட்டுள்ளது.

அதன்படி பொதுத்தோ்வுகள் வரும் அக். 14-இல் தொடங்கி நவ. 18 வரை நடைபெறும். இந்த தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. விரிவான தோ்வுக்கால அட்டவணையை மாணவா்கள் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பொதுத்தோ்வுக்கான அனுமதிச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) தோ்வுக்கு சில நாள்கள் முன்பு வெளியிடப்படும். பொதுத் தோ்வுகளின் முடிவுகள் தோ்வு முடிந்த 7 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com