மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
Published on

இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்தை திராவிட மாடல் அரசு அறிவித்துள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீா்மானம், அபுதாபியில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மாநாட்டுக்கு முன்பாக ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை உள்பட அனைவருக்கும் பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com