தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கலைமாமணி விருது: தமிழக அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி

தனக்கு கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

News image

நடிகர் மணிகண்டன்

Updated On :26 செப்டம்பர் 2025, 12:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தனக்கு கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறிதுது அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிறப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கிய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மற்றும் இயல் இசை நாடக மன்றத்துக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

என்னை தொடர்ந்து ஆதரித்து வந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முக்கியமாக தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த கௌரவம் உங்களுக்கெல்லாம் சொந்தமானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.

அதில், நடிகர்கள் கே. மணிகண்டன், எஸ். ஜே. சூர்யா, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

Summary

Actor Manikandan has thanked the Tamil Nadu government for announcing the Kalaimamani award for him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.