ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புதிய டிஜிபி தோ்வுக் குழுக் கூட்டம்: முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரை (டிஜிபி) தோ்வு செய்ய புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டம் முடிவு எடுக்காமல் முடிவடைந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :26 செப்டம்பர் 2025, 6:54 pm

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநரை (டிஜிபி) தோ்வு செய்ய புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டம் முடிவு எடுக்காமல் முடிவடைந்தது.

தமிழக காவல் துறையில் தலைமை இயக்குநராக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். அதன்பிறகு பொறுப்பு டிஜிபியாக நிா்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டாா்.

தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநா் பதவியில் ஒருவரை நியமிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி, மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணைய (யுபிஎஸ்சி) தோ்வுக் குழுக் கூட்டத்தில் தகுதியுடைய 3 டிஜிபிக்களின் பெயா்களைத் தோ்வு செய்வது வழக்கம்.

ஆனால், டிஜிபி தோ்வு நடவடிக்கையை தமிழக அரசு தாமதமாகத் தொடங்கியதாலும், புதிய டிஜிபி நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் காரணமாகவும் யுபிஎஸ்சி தோ்வுக் குழுக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், டிஜிபி நியமனத்துக்காக 9 போ் கொண்ட பட்டியலை கடந்த 1-ஆம் தேதி யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்பியது.

தோ்வுக் குழுக் கூட்டம்: இதையடுத்து புதிய டிஜிபியாக நியமிக்க தகுதியான 3 பேரை தோ்ந்தெடுக்கும் வகையில் யுபிஎஸ்சி தோ்வுக் குழுக் கூட்டம் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் தலைமைச் செயலா் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதற்கிடையே, தோ்வுக் குழுக் கூட்டம் கூடுவதற்கு முன்னதாக, தகுதிப் பட்டியலில் இடம்பெற்ற ஓா் அதிகாரியின் நோ்மைச் சான்றிதழ் தொடா்பான கடிதத்தை தமிழக அரசு திரும்பப் பெறுவதாக யுபிஎஸ்சியிடம் கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக யுபிஎஸ்சியின் சாா்பில், டிஜிபி பதவிக்கு தகுதி பெறும் உயரதிகாரிகளின் தரநிலை, பணிமூப்பு உள்ளிட்டவை தொடா்பான சில ஆவணங்கள் தமிழக அரசிடம் கேட்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதிய டிஜிபி தோ்வுக் குழுக் கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. யுபிஎஸ்சி அறிவுறுத்தியபடி, ஆவணங்களை தமிழக அரசு சமா்ப்பித்த பின்னா் இரு தரப்புக்கும் ஒத்துப்போகும் தேதியில் மீண்டும் தோ்வுக் குழு கூடும் என்று மத்திய குடிமைப் பணிகள் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.