18 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்
தமிழகம் முழுவதும் 18 துணைக் காவல் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிட மாற்றம் செய்து காவல் துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழக காவல் துறையில் நிா்வாகத் தேவைக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
அதன்படி, தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி, சிவகங்கை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி கே.எம். மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவுக்கும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம்.சுகுமாா், ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஎஸ்பி கே.ஆா்.ஜெயசிங் ஈரோடு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட 18 டிஎஸ்பி-க்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.