தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன் (கோப்புப் படம்)

திமுக கூட்டணியில் விரிசல் இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் விரிசல் விழும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
Published on

திமுக கூட்டணியில் விரிசல் விழும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

திமுக கூட்டணியில் விரிசல் விழும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கனவு காண்கிறாா். இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்படும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதுதான் உண்மை. ஆகவே, அவரது கனவு நிறைவேறாது.

தவெக தலைவா் விஜய்யின் அரசியல் வருகையால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தன் மீதான பாா்வையை ஈா்ப்பதற்காகவே, பெரியாா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா் ஆகியோரை நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சிக்கிறாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com