
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற விஜய், தற்போது எக்ஸ் தளத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார்.
விஜய் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.