
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இன்று மாலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பிய இந்த மிரட்டலைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் பிரசாரம் மேற்கொண்ட கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்ததால், விஜய் வீட்டிற்கு காலை முதலே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
40 பேர் பலி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை (செப். 27) இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவரையொருவர் முந்திக்கொண்டு கூட்டம் அலைமோதியது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று பலியானதால், கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.