மழை
மழை(கோப்புப்படம்)

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.29) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதைப் பற்றி...
Published on

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.29) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதனால், திங்கள்கிழமை (செப்.29) முதல் அக்.4-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.29) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாறு பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. அவலாஞ்சி (நீலகிரி), பெரியாறு (தேனி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), சின்கோனா, வால்பாறை- 3 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com