தமிழ்நாடு
எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்!
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பொருளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
அவரது 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம், திங்கள், செவ்வாய் (செப்.29, 30), அக்.4 ஆகிய தேதிகளில் தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சுற்றுப்பயணத் திட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அக்டோபா் 2, 3, 6 ஆகிய தேதிகளில் அந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.