கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்: இபிஎஸ்

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image

எடப்பாடி பழனிசாமி

Updated On :28 செப்டம்பர் 2025, 6:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக கூட்டம் நடைபெறுகின்றபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்கெனவே நடந்த தவெகவின் 4 கூட்டங்களைப் பார்த்து அதற்கேற்றவாறு முழுமையான பாதுகாப்பை அரசும் காவல் துறையும் கொடுத்திருக்க வேண்டும்.

அதேபோல் அதிமுகவின் எழுச்சிப் பயணித்தின்போதுகூட முழுமையான பாதுகாப்பை அரசு கொடுக்க வில்லை. இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல், பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள்.

அரசியல் கட்சித் தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலாசித்து, செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால் கட்சி, காவல் துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள். அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சியில் இப்படிபட்ட நிகழ்வுகள் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டம் நடத்துவதே மிகவும் சிரமம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகே கூட்டம் நடத்த முடிகிறது. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்திற்கு இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மெரினாவில் ஏர் ஷோவின் போது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படாததால் 5 பேர் பலியாகினர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

Former CM Edappadi Palaniswami cites security lapses by police and administration behind Karur TVK rally stampede, urging preventive measures to avoid future tragedies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.