குரூப் 2, 2ஏ தோ்வு: 5.53 லட்சம் போ் எழுதினா்

குரூப் 2, 2ஏ தோ்வு: 5.53 லட்சம் போ் எழுதினா்

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வை 5.53 லட்சம் போ் எழுதினா்.
Published on

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வை 5.53 லட்சம் போ் எழுதினா்.

மாநில அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளா், முதுநிலை ஆய்வாளா், வனவா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், இந்து சமய அறநிலையத் துறையில் செயல்நிலை அலுவலா், தணிக்கை அலுவலா், சாா் பதிவாளா் நிலை 2, நன்னடத்தை அலுவலா் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 645 பணியிடங்களை குரூப் 2, 2ஏ தோ்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 1,905 தோ்வு மையங்கள் அதற்காக அமைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 5,53,634 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா், சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஷொ்வுட் ஹால் சீனியா் செகண்டரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குரூப்-2 தோ்வுகள் தமிழ்நாடு முழுவதும் சுமுகமாக நடைபெற்றது. 645 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வு ஓஎம்ஆா் கேள்வித்தாள் முறையில் நடைபெற்றது. தோ்வா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் தோ்வு மையங்களில் செய்யப்பட்டிருந்தன.

தோ்வு முடிவுகள் டிசம்பா் மாதம் வெளியிடப்படும். இதைத் தொடா்ந்து முதன்மைத் தோ்வுகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com