கரூர் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்திரன் கோரிக்கை

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான விசாரணையை இன்றைய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பாஜக கோரிக்கை
கரூர் பலி: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நயினார் நாகேந்திரன் கோரிக்கை
Published on
Updated on
1 min read

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான விசாரணையை இன்றைய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசுகையில்,

``கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், இந்தியாவையே உலுக்கியிருக்கிற ஒரு மாபெரும் துயரமான சம்பவம். குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஒருவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தத்தைத் தெரிவித்து, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் யாரையும் உடனடியாக குறைசொல்லாமல், தீர விசாரிக்க வேண்டும். ஆகையால், இன்றைய உச்ச நீதிமன்ற அமர்வு இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்றமும் இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கூட்ட நெரிசல் சம்பவம், முழுக்க முழுக்க காவல்துறையின் அஜாக்கிரதையால் நடந்துள்ளது. கூட்டம் நடத்துவதற்கு முன்பே, கட்சியினர் முறையாக விண்ணப்பித்தபோது அவர்களுக்கு வரும் கூட்டத்தின் அளவைப் பொறுத்து, தகுந்த இடம் ஒதுக்கி இருக்க வேண்டும்; ஆனால் ஒதுக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?

Summary

Karur stampede death: Nainar Nagenthran demands Supreme Court inquiry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com