
கரூர்: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழக்க காரணம் என்ன? என்பதை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கியுள்ளார்.
கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் மயக்கமடைந்து பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் ராஜகுமாரி ஞாயிற்றுக்கிழமை(செப். 28) இரவு பார்வையிட்டார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்களை பிரதேச பரிசோதனை செய்து உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்த வரை மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் இரண்டு பேர் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்.
உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில், பெரும்பாலானவர்கள் உயிரிழப்புக்கு காரணம் மூச்சு திணறல் என்பது உறுதியாகி உள்ளது.
உடற்கூறு ஆய்வுக்கு மட்டும் பதினாறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 60 முதல் 70 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இவர்களைத் தவிர சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தவிர, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.