மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு

கரூர் பலி: எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் - அண்ணாமலை

கரூர் துயரச்சம்பவத்தில் எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை - X

Published On :

கரூர் துயரச்சம்பவத்தில் எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரூர் துயரச்சம்பவத்தில் 40 அப்பாவிகளை பறிகொடுத்துள்ளோம். இன்னும் கவலைக்கிடமாய் சிலர் உள்ளனர். அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழகத்தில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை.

இனியும் நடக்கக்கூடாது. பலியானவர்கள் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்; இதை கருத்தில் கொண்டு கரூர் பாஜக சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் கொடுக்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உதவ தீர்மானித்துள்ளோம்.

எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான். முதல் தவறு மாவட்ட நிர்வாகம், காவலர்கள் மீதுதான். அவர்கள் உரிய இடத்தை கொடுக்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வாய்ப்பே இல்லையென தெரிந்தபோதும் ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்? சரியான இடத்தை கொடுப்பது அரசின் கடமை.

முடியவில்லை என்றால், கூட்டத்திற்கு அனுமதியே கொடுக்காதீர்கள். அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது போல கரூர் சம்பவத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். விஜய் மீதான குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன். கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

விஜய் இதிலிருந்து மீண்டு வர வேண்டும், மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

Former BJP leader Annamalai has said that our first accusation in the Karur tragedy is against the state government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.