
கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தையடுத்து, இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான தேர்தல் பிரசாரத்தில் 39 பேர் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்றும் நாளையும் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்தார்.
மேலும், இன்று நடைபெறவிருந்த திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.