கரூர் பலி: முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த ராகுல் காந்தி!

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ராகுல் காந்தி விசாரித்தார்.
ராகுல் காந்தி / மு.க. ஸ்டாலின்
ராகுல் காந்தி / மு.க. ஸ்டாலின்கோப்புப் படங்கள்
Published on
Updated on
1 min read

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விசாரித்தார்.

இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறைக்கு ராகுலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது,

''கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.

40 பேர் பலி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை (செப். 27) இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவரையொருவர் முந்திக்கொண்டு கூட்டம் அலைமோதியது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று பலியானதால், கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிக்க | கரூர் பலி: யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை - கனிமொழி

Summary

Rahul Gandhi inquired about Karur stampede

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com