
கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, இன்று(செப். 29) காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தவெக தலைவர் விஜய், கரூரில் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனா். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக கரூரில் இன்று(செப். 29) விசாரணை நடத்தி வருகிறது.
கூட்ட நெரிசல் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, பலியானவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: தடம்புரண்ட திரைக்கதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.