கரூரில் 40 பேர் உயிரிழப்புPTI
தமிழ்நாடு
கரூா் உயிரிழப்பு: சீனா இரங்கல்
கரூா் பிரசார கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்: கரூா் பிரசார கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஜியு கியாகுன், ‘தமிழ்நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவ சிகிச்சையில் இருப்பவா்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்தியாவில் உள்ள சீன தூதரகமும் இது தொடா்பாக வருத்தத்தையும், இரங்கலையும் பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் சீனாவைச் சோ்ந்தவா்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை’ என்றாா்.