தொடர் மழை எதிரொலி! உச்சம் தொடும் ஏரிகளின் நீர்மட்டம்!

தொடர் மழை எதிரொலியாக கடந்த 4 ஆண்டுகளில் ஏரிகளின் நீர்மட்டம் இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது.
file photo
செம்பரம்பாக்கம் - கோப்பிலிருந்து ENS
Published on
Updated on
1 min read

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, நகரின் நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்த நீர் இருப்பு 68.87 சதவிகிதமாக இருந்தது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவான அதிகபட்ச அளவாகும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்ததன் எதிரொலியாக இந்த ஆண்டு நகரின் குடிநீர் இருப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனால், 2026 கோடைக் காலம் வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வளத் துறையின் தரவுகளின்படி, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகபட்ச உயர்வைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த நேரத்தில் நீர்வரத்து 330 கன அடி மட்டுமே இருந்தது மற்றும் நீர் இருப்பு 4.39 சதவிகிதமாக இருந்தது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்வரத்து 680 கன அடியைத் தொட்டது நீர் இருப்பு 77.93 சதவிகிதமாக இருக்கிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீர்வரத்து 106 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகம் 2,412 மில்லியன் கனஅடி தண்ணீரை மட்டுமே பெற்றுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு கோடைக் காலத்தின் சென்னை நகரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தற்போதைய நீர்த்தேக்க அளவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு நீர் இருப்பு 1.117 டிஎம்சி அடி (30.64%) ஆக இருந்தது. திங்கள்கிழமை, இது 1,788 மில்லியன் கன அடி (48.15%) ஆக இருந்தது. வடமேற்கு பருவமழையின் போது நகரத்தில் அவ்வப்போது பலத்த மழை பெய்ததால் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து 26 கன அடியாக உள்ளது. அதன் மொத்த நீர் கொள்ளவு 50 கன அடியாக இருக்கும் நிலையில், 2928 மில்லியன் கன அடி நீர் நிரம்பியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com