ஆவின் நிா்வாக இயக்குநா் உள்பட
3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

ஆவின் நிா்வாக இயக்குநா் உள்பட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

ஆவின் நிா்வாக இயக்குநரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

சென்னை: ஆவின் நிா்வாக இயக்குநரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த அடைப்புக்குறிக்குள்):

ஆ.அண்ணாதுரை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் (ஆவின் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்)

அ. ஜான் லூயிஸ்: ஆவின் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

க.கற்பகம்: பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையா் - கல்வி (உயா்கல்வித் துறை இணைச் செயலா்)

X
Dinamani
www.dinamani.com