
சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரம் சரிந்து விழுந்ததில் நேர்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலை 4-ல் கொதிகலன் பிரிவில் நடைபெறும் கட்டுமானப் பணியில் சாரம் சரிந்து இன்று (செப். 30) விபத்து நேர்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சைப் பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்டத் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக காட்டூர் பகுதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.