இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு விரைவு அஞ்சல் சேவையுடன் இணைக்கப்பட்டு, அக்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்காரணமாக , விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆவணங்களுக்கு அதிகபட்சம், 50 கிராமுக்கு உள்ளூருக்கு ரூ. 19, 200 கி.மீ.-க்கு ரூ. 47, 201 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ. 47, 51 கிராமில் இருந்து 250 கிராம் வரை உள்ளூருக்கு ரூ. 24, 200 கி.மீ. வரை ரூ. 59 , 201 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை ரூ.63, 501 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை ரூ.68, 1,001 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ. 72, 2,000 கி.மீ.க்கு மேல் ரூ. 77, 251 கிராமில் இருந்து 500 கிராம் வரை உள்ளூருக்கு ரூ. 28, 200 கி.மீ.-க்குள் ரூ.70, 201 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை ரூ. 75, 501 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை ரூ. 82, 1,001 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ.86, 2,000 கி.மீ.-க்கு மேல் ரூ. 93 கட்டணம் வசூலிக்கப்படும். திருத்தப்பட்ட கட்டணங்கள், புதன்கிழமை (அக்.1) முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.