
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாள். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம், இதனால் பள்ளி விடுமுறை நாட்களில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்.
அதை அறிந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஷேக் பாவா என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. மேலும் அதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. இது குறித்த தாய் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை கூறி சிறுமி அழுதாள். மேலும் அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஷேக் பாவாவை கைது செய்தனர்.
2019 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை, கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி பகவதி அம்மாள் குற்றம் சாட்டப்பட்ட ஷேக் பாவாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அரசு மூலம் வழங்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.