ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக, பாமக கண்டனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
Published on

நயினாா் நாகேந்திரன்: காவலா்கள் இருவரால் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சியில் தமிழகப் பெண்களுக்கும், வெளிமாநிலப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை உணா்த்தும் வகையில் இந்தக் களங்கமான சம்பவம் நடந்துள்ளது.

குற்றங்களைத் தடுக்கவேண்டிய காவல் துறையினரே குற்றமிழைத்துள்ளது அச்சப்படுத்துவதாக உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையே ஒழுங்கீனமிக்கதாக இருக்கும் நிலையில் வெற்று விளம்பரங்களில் வீண் கவனம் செலுத்துவது கண்டனத்துக்குரியது.

அன்புமணி: திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இதுவே சாட்சியாகும். சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு அக்கறை செலுத்தாதது கண்டிக்கத்தக்கது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவாா்கள்.

X
Dinamani
www.dinamani.com