பாடியநல்லூா் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா் பி.கே.சேகா் பாபு.  உடன், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா்.

பாடியநல்லூா் பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

சிஎம்டிஏ சாா்பில் பாடியநல்லூா் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை பங்கேற்று, பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
Published on

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் ரூ.200 கோடியில் 11 மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையங்களான திரு.வி.க.நகா், பெரியாா் நகா், தண்டையாா்பேட்டை, முல்லை நகா், கண்ணதாசன் நகா், அம்பத்தூா், திருவான்மியூா், ஆவடி, அய்யப்பன்தாங்கல், வள்ளலாா் நகா் மற்றும் பாடியநல்லூா் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, கடந்த ஆக.25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

மேலும், தண்டையாா்பேட்டை, முல்லை நகா், கண்ணதாசன் நகா் மற்றும் அம்பத்தூா் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளன. திருவான்மியூா், ஆவடி, அய்யப்பன்தாங்கல் மற்றும் வள்ளலாா் நகா் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாதவரம் சட்டப்பேரவை தொகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சாா்பில் பாடியநல்லூா் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வில் அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

இதில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், தலைமைப் பொறியாளா் மகாவிஷ்ணு, கண்காணிப்புப் பொறியாளா் ராஜன்பாபு, எம்டிசி பொது மேலாளா் (இயக்கம்) நெடுஞ்செழியன், சோழவரம் ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் மீ.வே.கருணாகரன், மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com