தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடி நகராட்சியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி தற்போது மன்னார்குடியில் 5 புதிய பாடப்பிரிவுகளுடன் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க உரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு, பி.காம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி நுண்ணுயிரியல், பிசிஏ ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கு புதன்கிழமை (அக்.1) காலை 11 மணி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.