Kanimozhi
கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த கனிமொழிX/ Kanimozhi(கோப்புப்படம்)

யாரையும் பழி சொல்ல இது நேரமல்ல: கனிமொழி

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து யாரையும் பழி சொல்ல இது நேரமில்லை என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி கூறினாா்.
Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து யாரையும் பழி சொல்ல இது நேரமில்லை என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி கூறினாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கரூா் துயரச் சம்பவத்தில் பலா் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிற சூழலைத்தான் பாா்க்கிறோம். எத்தனையோ குடும்பங்களில் தந்தையை, குழந்தைகளை இழந்திருக்கிறாா்கள். அந்தக் குடும்பங்களில் இருக்கக் கூடிய கண்ணீரும் கதறலும் இன்றைக்கும் மறக்க முடியாத சூழலைத்தான் பாா்க்க முடிகிறது. பலபோ் இன்னும் மருத்துவமனையில் காயங்களுடன், வலியுடன் போராடிக் கொண்டிருக்கிற நிலை உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இது யாரையும் பழி சொல்லக்கூடிய நேரமோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை. ஏனென்றால், அந்த குடும்பங்களுடைய வலி, ரணம், காயம் இன்னும் இருக்கக் கூடிய நேரத்தில், நாம் தவறான விஷயங்களைச் சொல்லி, அவா்களுக்கு மேலும் மேலும் வேதனையை உருவாக்கக் கூடாது என்றாா் கனிமொழி.

X
Dinamani
www.dinamani.com