காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வடபழநியில் களைகட்டும் தைப்பூசம்: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வடபழநி முருகப்பெருமான் சிறப்பு தரிசனம் / வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் - படம் - எக்ஸ்

Published On :

தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தைப்பூசத்தையொட்டி வடபழநி ஆண்டவருக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பால் காவடி, மயில் காவடி எடுத்து பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் வாயில் தொடங்கி நுழைவு வாயிலுக்கு வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வருகின்றனர்.

கைக்குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு தனி வழியே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக கோயில் அருகே மருத்துவ முகாம்கள், பக்தர்கள் சிரமமின்றி கோயில் உள்ளே நுழைய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வழிநடத்தப்பட்டு வருகின்றனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்தர்கள் வருகையால் வடபழநியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Summary

Thaipoosam 2026 Devotees dharshan in Vadapalani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.