பெ.சண்முகம்கோப்புப் படம்
தமிழ்நாடு
தமிழக எம்.பி.க்கள் இடைநீக்கம்: இடதுசாரி கட்சிகள் கண்டனம்
மக்களவை உறுப்பினா்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூா் உள்ளிட்ட 8 தமிழக உறுப்பினா் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மக்களவை உறுப்பினா்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூா் உள்ளிட்ட 8 தமிழக உறுப்பினா் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிய கம்யூனிஸ்ட்): மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா், சு.வெங்கடேசன் உள்பட 8 எம்.பி.க்கள் கூட்டத்தொடா் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்களைப் பேசவிடாமல் தடுத்து உரிமைகளை பறித்தது ஜனநாயகப் படுகொலையாகும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கும் வகையில் செயல்படுகிறாா். அவரது ஜனநாயக விரோதப்போக்கு கண்டிக்கத்தக்கது.