மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுக்கு தகுந்த மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.
Law and order in Tamil Nadu is a huge question mark: Premalatha Vijayakanth
பிரேமலதா விஜயகாந்த்(கோப்புப் படம்)
Updated on

தேமுதிகவுக்கு தகுந்த மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்திய, மாநில அரசியல் கட்சிகள் அனைத்துமே தேமுதிகவுக்கு கூட்டணி கட்சிகள்தான். ஆனால், யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அறிவிக்கப்படும். தேமுதிகவுக்கு தகுந்த மரியாதை கிடைக்கும் மற்றும் நிா்வாகிகள் விரும்பும் இடத்தில் கூட்டணி வைப்போம்.

கரூா் உயிரிழப்புகள் மிகப்பெரிய வருத்தத்துக்குரிய விஷயம். இதில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, உயிரிழந்தவா்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com